கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு கணித பாடத்தில் சித்தியடைய இரண்டு வருட கால அவகாசம் வழங்க கல்வியமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கை பாராட்டத்தக்கது என ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது,
சில மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி இல்லாத காரணத்தினால் அவர்கள் உயர் கல்வியைத் தொடரும் சந்தர்ப்பத்தை இழக்கின்றனர். இது ஒரு வகை அநீதியாகும்.
இந்தப் பிர்ச்சினையை கல்வியமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவந்து பல வரவேற்கத்தக்க மாற்றங்கள் செய்துள்ளார்.
இதன்படி கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு அப்பாடத்தில் சித்தியடைய இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.