BREAKING NEWS

Feb 8, 2014

தேசிய தொழில் தகைமைகள் NVQ மாதிரி

-ரிஹ்மி முஹம்மத்-

தேசிய தொழில் தகைமைகள் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் முறையான பயிற்சி நெறியொன்றைப் பின்பற்றி ஏதேனுமொரு தொழிலில் தேர்ச்சி பெற்றவர்கள் போன்று தொழிலொன்றில் ஈடுபடுவதன் மூலம் நீண்டகாலமாகப் பெறுகின்ற பழக்கம் வரவேற்கப்படும்.

தேசிய தொழில் தகைமைகள் சான்றிதழ் நிகழ்ச்சித் திட்டத்தின் பயன்கள்.

தேசிய தொழில் தகைமைகள் சான்றிதழ் பயிற்சி சான்றிதழ் அல்ல.

நீங்கள் ஈடுபட்டுள்ள தொழிலில் பெற்றுள்ள தேர்ச்சி மட்டத்தை (NVQ Level) முறையாக மதிப்பீடு செய்ததன் பின்னர் அதை ஒழுங்காக ஏற்றுக்கொள்தல், சான்றிதழ் வழங்கல் மேற்கொள்ளப்படுகிறது. அது உங்களுடைய தேர்ச்சிக்காக வழங்கப்படுகின்ற சான்றிதழாகும்.

தேசிய தொழில் தகைமை ஊடாகப் பெறுகின்ற வரவேற்பை அடிப்படையாகக்கொண்டு உயர் தகைமை பெறுவதில் ஈடுபடமுடியும்.

தேசிய தொழில் தகைமை என்பது தேர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு முறையாக இருக்கின்ற அதேநேரத்தில், அதற்காக வெளிநாட்டுத் தொழிற்சந்தையில் உயர்ந்தளவில் கேள்வி இருக்கிறது.

தேசிய தொழில் தகைமைகளுக்காகத் தரக்கட்டளை நிர்ணயித்தல், அதன்பொருட்டு தகைமை பெற்ற திறமைசாலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற அதேநேரத்தில், அதன் காரணமாகவே தேசிய தொழில் தகைமைகள் சான்றிதழ் பயனாளிகளுக்கு அதிக தொழில் வாய்ப்புகள் உள்ளது.

தேசிய தொழில் தகைமைகள் உள்ளவர்களுக்கு உயர் தகைமைகளைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியிருந்தால் அச்செயல்முறை அதற்கு உறுதுணையாக இருக்கிறது.

சேவைதருநர் பெறும் பயன்கள்

தேசிய தொழில் தேர்ச்சியுள்ள குழுக்களை சேவையில் சேர்த்துக்கொள்வதன் காரணமாக மிக இலகுவாகவும் வினைத்திறன் மிக்கவகையிலும் தொழில் தேர்ச்சியுள்ள ஊழியர்களை உருவாக்கிக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.

தேசிய தொழில் தேர்ச்சிச் சான்றிதழ் காரணமாகப் பதவியுயர்வுகளையும் மிகச் சிறந்த இடைத்தொழில்நுட்ப ஒத்துழைப்பையும் கட்டியெழுப்பிக்கொள்ளக்கூடியதாக இருத்தல்.

NVQ/RPL வர்த்தகப்பட்டியல்.

RPL என்றால் என்ன?

RPL (Recognition of prior learning) தேசிய தொழில் தகைமைகள் மாதிரியின் பிரகாரம் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற தேசிய அடிப்படையிலான திறன்களை மதிப்பீட்டுக்கு உட்படுத்தி மதிப்பீட்டுக்கு உள்ளாக்கப்படுகின்ற நபர்கள் பெற்றுக்கொண்டுள்ள தேர்ச்சியை வகைப்படுத்தலுக்குள்ளாக்கி மேற்படி தேர்ச்சிகளை முறைசாராத மற்றும் பாரம்பரியங்களுக்குப் புறம்பான செயல்முறைகளைப் பயன்படுத்தி முழுமையான வரவேற்புக்குட்படுத்துவது அச்செயல்முறையாகும்.

தேசிய தேர்ச்சித் தரக் கட்டளையை அடிப்படையாகக் கொண்டு அதற்கு சார்பியலாக ஒவ்வொரு பயிற்சி நெறியின் மூலமும் நிகழ்ச்சித் திட்டத்தின் மூலமும் வழங்கப்படுகின்ற தேர்ச்சியை மதிப்பீட்டுக்கு உட்படுத்துதல் மற்றும் அதன்மூலம் கலந்துகொள்கின்ற பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படுகின்ற சான்றிதழ் வகைப்படுத்தலுக்குட்படுத்தப்படுகிறது.

தேசிய தொழில் தகைமைகளுக்காக நபர்களை மதிப்பீட்டுக்குட்படுத்துதல்.

தேர்ச்சி மட்டத்தை நிர்ணயிப்பதற்காக பயிற்சியொன்றை மதிப்பீட்டுக்குட்படுத்துதல்.

பின்வரும் வரைபடம் RPL செயல்முறையை விளக்குகிறது.

மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற பயிற்சி நிறுவனங்களை RPL செயல்முறையினூடாக மதிப்பீட்டுக்குட்படுத்துவதற்காக விண்ணப்பிப்பதற்குத் தகுதியானதாகும். ஆகவே, முன்னர் ஏற்றுக்கொள்ளப்படாத திறன்களும் தேர்ச்சிகளும் நிறுவனக் கட்டமைப்புக்குப் புறம்பாக தேசிய தொழில் தகைமைகளுடன் ஒப்பிட்டு தேர்ச்சியை நிர்ணயிப்பதற்காக ஆற்றுப்படுத்தப்படுகிறது.

தேசிய தொழில் தகைமையை RPL செயல்முறையின் மூலம் வழங்குதல்.

உரிய நேரத்தில் நிறுவனத் தலைவர் அல்லது வேலைப் பரிசோதகரால் சான்றுப்படுத்தப்படுகின்ற பயிற்சி / தொழிலில் ஈடுபட்டுள்ள தேர்ச்சிச் சான்றிதழ் அறிக்கை மூலம்.

கைப்பணிகளும் மாதிரிகளும்.

தேர்ச்சியை ஏற்றுக்கொண்டு வழங்குகின்ற சான்றிதழ் பரிந்துரை.

குறித்த துறையில் திறமை பெற்றவர்கள் செய்யும் பரிந்துரை.

தொழிலில் / பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றபோது பதிவு செய்யப்பட்ட கட்புல நாடாக்களைப் பயன்படுத்தி.

சேவையிலீடுபட்டிருக்கின்ற நேரத்தில் மேற்கொள்ளப்படுகின்ற கள அவதானிப்பு.

செயல்முறை ரீதியான / கோட்பாட்டு ரீதியான ஆய்வு.

உங்களுடைய வாழ்க்கைத் தொழில் உங்களிடமுள்ள திறமை, ஆற்றல் என்பவற்றின் மீது இற்றைவரையும் தங்கியிருந்தது. தற்போது தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை தொழில் தேர்ச்சிக்காகத் தேசிய சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பித்திருப்பதன் காரணமாக உங்களிடமுள்ள தேர்ச்சிக்கு தேசிய தேர்ச்சிச் சான்றிதழைப் (NVQ) பெற்றுக்கொள்ள வாய்ப்புக் கிட்டியுள்ளது.

இதற்கு வயதெல்லையோ அல்லது அடிப்படைத் தகைமையோ தேவையில்லை. இச்சான்றிதழ்கள் தேசிய ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுகின்ற அதேநேரத்தில் சர்வதேச ரீதியாகவும் வரவேற்கப்படுகின்றது. நீங்கள் சுயதொழிலில் ஈடுபட்டிருந்தால் இச்சான்றிதழ் வங்கிக் கடன் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்குப் பயனுறுதியுள்ளதாக அமைகின்றது.

இதன்மூலம் திறக்கப்படுகின்ற பாதை தேசிய டிப்ளோமா, உயர் டிப்ளோமா மற்றும் பட்டம் அடிப்படையிலான தகைமைகளுக்கு வழிகாட்டுகின்ற அதேநேரத்தில், அதன் பிரகாரம் உங்களுடைய எதிர்கால தொழில் வாழ்க்கைத் தன்னம்பிக்கையுடன் வடிவமைத்துக்கொள்ள வாய்ப்பளிக்கின்றது.

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் மூலம் தெரிவு செய்யப்படுகின்ற இடத்தில் அல்லது உங்களுடைய வேலைத்தல சுற்றுச்சூழலில் அல்லது பயிற்சி நிலையமொன்றில் உங்களுடைய தேர்ச்சி அல்லது ஆற்றல் மதிப்பீட்டுக்குட்படுத்தப்படுகின்றது.

நீங்கள் தேசிய தொழில் தேர்ச்சிச் சான்றிதழ் ஒன்றை உரித்தாக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாகவிருந்தால் அதன்பொருட்டு பதிவுசெய்து கொள்வதற்காக ரூபா 250/- பணத்தை அதிகார சபைக்குச் செலுத்துவதன் மூலமும் அது குறித்த விண்ணப்பப்படிவத்தை இவ் வெப் தளத்தினூடாக அல்லது அதிகார சபைக்கு வந்து பெற்று நிரப்பிக் கொடுப்பதன் மூலமும் ஒப்படைக்கமுடியும்.

பதிவுக் கட்டணம்.

நுகேகொட மக்கள் வங்கிக் கிளையில் 174100170347379 இலக்கமுடைய கணக்கிற்கு அல்லது எந்தவொரு மக்கள் வங்கிக் கிளையிலும் கட்டணத்தைச் செலுத்த முடியும்.

எந்தவொரு கடமை நாளிலும் முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை தேசிய தொழில் தகைமைகள் பிரிவுக்கு வந்து பின்வரும் முகவரியில் பணத்தைச் செலுத்தமுடியும்.

ரூ. 250/- பணம் செலுத்தியதன் பின்னர் அப்பற்றுச்சீட்டை தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பமுடியும் அல்லது நேரில் கொண்டுவந்து ஒப்படைக்கமுடியும்.

மேற்படி கட்டணத்திற்கு மேலதிகமாக, பயிற்சி பரீட்சைகளுக்குப் பயன்படுத்துகின்ற மூலப்பொருட்கள் மற்றும் ஏனைய ஆய்வுக் கட்டணங்கள் ஏற்புடையதாகலாம்.

விண்ணப்பப்படிவங்களை ஒப்படைக்கவேண்டிய, மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளக்கூடிய முகவரி:

தேசிய தொழில் தேர்ச்சி தகைமைகள் மதிப்பீட்டுப் பிரிவு,

தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை,

இல. 971, ஸ்ரீ ஜயவர்தனபுர மாவத்த,

வெலிகட, இராஜகிரிய.

தொ.பே. இல. +94 11 2863680

மேலதிக விபரங்களுக்கு  http://www.naita.gov.lk/images/stories/mod/download/nvq_application_engl...

தகவல் naita.gov.lk

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &