BREAKING NEWS

Jul 2, 2013

மருத்துவ மனையில் மண்டேலா... குடும்பத்தினர் சண்டையில்

ஆஸ்பத்திரியில் மண்டேலா... புதைக்கும் இடம் குறித்த சண்டையில் கோர்ட் சென்ற குடும்பத்தினர்
ஜோகன்ஸ்பர்க்: மருத்துவமனையில் இருக்கும் மண்டேலா நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என உலக மக்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் அதே வேளையில், மண்டேலா குடும்பத்தினர் மண்டேலா இறந்த பிறகு எங்கே புதைப்பது என்ற சச்சரவில் கோர்ட் படியேறியுள்ளனர். 

கறுப்பர் இன விடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையிலேயே தன் வாழ்க்கையைக் கழித்த ,தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா தற்போது உடல் நலக்குறைவு காரணமாக பிரேடோரிகாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 94 வயதான மண்டேலா, கடந்த 25 நாட்களாக தீவிர கண்காணிப்பு சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மண்டேலா மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக, தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சீக்கிரம் நலம் பெற வேண்டும் என உலக மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். 

ஆனால், அதற்குள் அவர் மரணம் அடைந்ததும் அவரது உடலை எங்கு புதைப்பது என்பதில் அவரது குடும்பத்தினர் இடையே சர்ச்சை உண்டாகியுள்ளது. மரணம் அடைந்ததும், மண்டேலாவின் இறுதி சடங்கை முடித்து, உடலை மவெஷா என்ற இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என அவரது பேரன் மாண்ட்லா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

மவெஷாவில் தான், மண்டேலாவின் 3 குழந்தைகள் உடல் அடக்கம் நடந்துள்ளது எனவே, அங்கு தான் மண்டேலா அடக்கம் செய்யப்பட வேண்டும் என மாண்ட்லா அடம் பிடிக்கிறார். மாவெஷா குக்கிராமம் பிரடோரியாவில் இருந்து 600 மைல் தொலைவில் ஒரு மலையோரம் உள்ளது. 

ஆனால், அதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் மண்டேலாவின் குடும்பத்தினர். மண்டேலாவின் மகள்கள் மகாஷிவே, மற்றும் ஷிண்ட்ஷி உள்பட உறவினர்கள் 16 பேர் சேர்ந்து மாண்ட்லாவிற்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், தங்கள் பக்க நியாயமாக, மண்டேலா தான் இறந்ததும் தனது உடலை மூதாதையர்கள் வாழ்ந்த கிராமத்தில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என கடிதம் எழுதி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &