BREAKING NEWS

Jul 2, 2013

அதிகாரங்களை குறைத்தால் அரசிலிருந்து விலகுவேன்: வாசு

அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதன் பிரகாரம் 13 ஆவது திருத்தம் அமுல்படுத்தப்படல் வேண்டுமென்று தெரிவித்த தேசிய மொழிகள் மற்றும் சமூக நல்லிணக்க அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மாகாண சபைக்கான அதிகாரங்கள் குறைக்கப்பட்டால் அரசிலிருந்து விலகுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை முறைமையை ஒழிப்பதற்கோ இன்றேல் அதிலிருக்கின்ற அதிகாரங்களை குறைப்பதற்கோ எடுக்கப்படும் முயற்சிகளை தான் முழுயாக எதிர்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தை கட்டாயமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அதனை ஏற்றுக்கொள்ளாமல் 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் மாற்றியமைக்கப்பட்டு மாகாண சபை முறைமை ஒழிக்கப்படுமாயின் இந்த அரசிலிருந்து தான் விலகிவிடுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

நான் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவன் என்பதுடன இந்த அரசாங்கத்தில் ஜனநாயகம் தொடர்பில் பிரச்சினையொன்று இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &