சவுதி அரேபிய கிழக்கு மாகாணத்தின் அல் கப்ஜி நகரில் இன்று 07-02-2014 ஜும்ஆ தொழுகைத் தொடர்ந்து தமிழ் பேசுபவர்களுக்கான விஷேட நிகழ்ச்சி ஒன்றை அல் கப்ஜி தஃவா நிலையம் தமாக் நிறுவனத்தின் விடுதியில் ஏற்பாடு செய்தது. அல்ஹம்துலில்லாஹ்.
இலங்கை மற்றும் தென்னிந்திய சகோதர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்சியில் தமது தாய்நாட்டைப் பிரிந்து தொழில் நிமித்தம் வந்திருக்கக் கூடியவர்களிடம் ஆன்மீக பற்று வரவேண்டியதன் அவசியம் தொடர்பான சிறப்புரை மேற்படி தஃவா நிலையத்தின் தமிழ் மற்றும் சிங்கள மொழிப் பிரவு பொறுப்பாளர் அஷ்ஷெய்க் றிஸ்கான் முஸ்தீன் மதனி அவர்களால் நடாத்தப்பட்டது.
நிகழ்சி முடிவில் வினா- விடை போட்டி வைக்கப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்க பரிசில்களும் வழங்கப்பட்டன.
தகவல் அபூ தர்வேஷ் - அல் கப்ஜி.



