BREAKING NEWS

Oct 3, 2013

ஹன்சிகாவுக்கு எதிராக வழக்கு



'ரவுடிக் கோட்டை' திரைப்படத்துக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ள நடிகை ஹன்சிகா மீது வழக்குத் தொடரப் போவதாக அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் எஸ். சுந்தரலட்சுமி அறிவித்துள்ளார்.

மேற்படி திரைப்படத்திலுள்ள ஒரு பாடல் காட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருப்பதால் அத்திரைப்படத்தை தமிழில் வெளியிடுவதற்கு எதிர்பபு தெரிவித்து வருகிறார் ஹன்ஷிகா மோத்வானி.

சிவம் அசோசியேட்ஸ் சார்பில் எஸ்.சுந்தரலட்சுமி தயாரித்துக் கொண்டிருக்கும் 'ரவுடி கோட்டை' திரைப்படத்தை தமிழில் திரையிட அனுமதிக்கக் கூடாது என்று ஹன்சிகா மோத்வானி நடிகர் சங்கத்தில் முறைப்பாடொன்றைச் செய்துள்ளார் என்று ஒரு நாளிதழ் செய்தி வெளிட்டுள்ளது. அதுபற்றி தயாரிப்பாளர் எஸ்.சுந்தரலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

'தெலுங்கில் வெளியான சீதாராம கல்யாணம்' என்ற திரைப்படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்ய அதன் தயாரிப்பாளர் வெல்கார் என்டர்பிரைசஸ், விஜய்மல்லா பிரசாத் என்பவரிடமிருந்து வாங்கினேன். திரைப்படத்தின் மொழிமாற்றம் மற்றும் அனைத்து வேலைகளையும் முடித்து 'ரவுடி கோட்டை' என்ற பெயரில் திரையிட முடிவான நேரத்தில் இது மாதிரி ஒரு புகார் குறித்து அதிர்ச்சி அடைந்தேன்.

நடிகை ஹன்சிகாவுக்கும் தெலுங்கு திரைப்பட அதிபருக்கும் இடையே எந்த மாதிரியான ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்பது எங்களுக்கு தெரியாது. நாங்கள் அந்த தயாரிப்பாளரிடம் இதுபற்றி கேட்டோம்.

அதற்கு அவர், ஹன்சிகா சொல்லவது மாதிரி தெலுங்கை தவிர வேறு எந்த மொழியிலும் மொழிமாற்றம் செய்ய கூடாது என்று ஒப்பந்தம் எங்களுக்குள் எதுவும் இல்லை. வாய்மொழியாகக் கூட அவர் கேட்கவும் இல்லை. நாங்களும் வாய்மொழியாக கூட ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறினார்.

அப்படி ஹன்சிகா தடை கேட்டோ, வழக்கு தொடர்வதாகவோ இருந்தால் தெலுங்கு திரைப்பட அதிபர் மீது தான் தொடர வேண்டும். எங்கள் மீது அவர் எடுக்கும் எந்த நடவடிக்கையும் எங்களை கட்டுப்படுத்தாது. இதை ஹன்சிகாவுக்கும் அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறோம்.

நடிகர் சங்கத்தில் எங்கள் மீதான நடவடிக்கையை ஹன்சிகா விலக்கிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் ஹன்சிகா மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க நேரிடும். ஏற்பட்டுள்ள நஷ்டத்தையும் ஹன்சிகா தான் ஏற்க வேண்டும்' என்றார் எஸ்.சுந்தரலட்சுமி.

இதுபற்றி இந்த திரைப்படத்தின் தமிழாக்கம் பொறுப்பேற்று இருக்கும் எ.ஆர்.கே.ராஜராஜா கூறியதாவது,

'ரவுடி கோட்டை திரைப்படத்தில் ஹன்சிகா 'இச் இச் இச்...' என்ற ஒரு பாடல் கட்சியில் படு கவர்ச்சியாக நடித்திருக்கிறார். அதனால் பயந்து போய் ஹன்சிகா தடை கேட்டிருப்பார் என்று நினைக்கிறேன் என்றார்.

ஹன்சிகா இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு போராடி வருவதற்குக் காரணம் தனது எதிர்க்கால வாழ்வில் எந்த ஒரு பிரிச்சனையும் வரக்கூடாது என்று எண்ணிக்கூட இருக்கலாம்' என்றார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &