கெசினோ சூதாட்ட சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டாம் என்று மதத்தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே பௌத்த, ஹிந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ ஆகிய மதங்களை சேர்ந்த தலைவர்கள் மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து இந்த சட்டமூலத்தினால் நாட்டிற்கும், சமூகத்திற்கு, கலாசாரத்திற்கும் ஏற்படபோகின்ற சீரழிவுகள் தொடர்பில் எடுத்தியம்பபோவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். TM