
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கின்றவர்களில் 13 பேருக்கு எதிர்வரும் 10 ஆம் திகதி வியாழக்கிழமை பிரதியமைச்சர் பதவிகள் வழங்கப்படவிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. தனடிப்படையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்த இருவருக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை சேர்ந்த இருவருக்கும் பிரதியமைச்சர் பதவிகள் கிடைக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரத்திற்கு பிரதியமைச்சர் பதவியொன்று வழங்கப்படவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமன்றி மாகாண சபைகளில் அமைச்சர்களாக பதவிவகித்து நாடாளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்கள் சிலருக்கும் பிரதியமைச்சர் பதவி வழங்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது.