ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் இருந்து வரும் நட்புறவான தொடர்புகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல இலங்கை எப்போதும் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஈரான் ஜனாதிபதி ஹசன் ரொஹானிக்கும், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நியூயோர்க்கில் இடம்பெற்ற இருத்தரப்பு பேச்சுவார்த்தையின் போது அவர் இதனை கூறியுள்ளார்.
மூன்று தசாப்த கால மோதலுக்கு பின்னர், தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வரும் உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், இடம் பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றியமை, மோதல் நடைபெற்ற பிரதேசத்தில் தேர்தல் நடத்தப்பட்டமை உட்பட பல விடயங்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஈரான் ஜனாதிபதிக்கு விளக்கியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.