BREAKING NEWS

Sep 6, 2013

உலகில் அதிக பருமன் உடைய முதலை









அமெரிக்காவின் மிஸ்பி ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட முதலை உலகில் மிக நீளமான முதலையென கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதியப்பட்டுள்ளது.

727 இறாத்தல் நிறையுடைய முதலையே இவ்வாறு உலகில் அதிக பருமன் மிக்க முதலையென கண்டறியப்பட்டுள்ளது.

சுழியோடியான டஸ்டின் பொக்மன் என்ற நபரே இம் முதலை பிடித்துள்ளார்.

அமெரிக்காவில், முதலை வேட்டை காலம் ஆரம்பித்து இரண்டு நாட்களே ஆகின்ற நிலையில் இத்தகைய பருமன் கொண்ட முதலை பிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காயமடைந்த நிலையில் காணப்பட்ட அந்த முதலையை பிடிப்பதற்கு தானும் தனது நண்பர்களும் எத்தகைய பாடுபட்டார்கள் என்பதை சுழியோடியான பொக்மன் விபரித்துள்ளார்.

"அந்த முதலையை பிடிப்பதற்கு சாரசாரியாக நான்கரை மணித்தியாலங்கள் தேவைப்பட்டன. நாங்கள் நான்கு பேர் இணைந்து எமது படகிற்கு அதனை இழுத்து எடுக்க முயன்றோம். கடைசி மணித்தியாலங்களில் எமக்கு அயலவர்களின் உதவி தேவைப்பட்டது' என்றார்.

இம்முதலை பிடிப்படுவதற்கு ஒரு மணித்தியாலத்திற்கு முன்பே உலகின் மிக நீளமான முதலையாக கருதப்படும் 13 அடி 4.5 அங்குலம் நீளம் கொண்ட முதலை பிடிக்கப்பட்டது. அதனது சாதனையை இம்முதலை முறியடித்துள்ளது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &