BREAKING NEWS

Sep 6, 2013

ஓய்வு பெறவுள்ளதாக போல்ட் அதிரடி அறிவிப்பு


உலகின் அதிவேக மனிதன் ஜமேக்காவின் ஓட்டப்புயல் உசைன் போல்ட் 2016 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டியுடன் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

இன்று நடைபெறவுள்ள டையமன்ட் லீக் போட்டியில் பங்கேற்க பெல்ஜியம் சென்றுள்ள அவர் பிரசெல்ஸ் நகரில் அளித்த பேட்டியின் போதே இதனைத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக்கில் சாதனையை நிலைநாட்டி ஓய்வு பெற வேண்டும் என்பதே எனது திட்டமாகும்.

ஒலிம்பிக்கில் மேலும் தங்கப்பதக்கங்களை வென்றதுடன் ஓய்வு பெறுவதே சரியான தருணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

முகமது அலி (குத்துச்சண்டை), பெலே (கால்பந்து) ஆகியோர் போன்று நானும் தலைசிறந்த வீரராக இருக்க வேண்டும் என்று விரும்பினால், ஓய்வு பெறும் வரை தடகளத்தில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.

உலகின் மின்னல் வேக ஓட்டப்பந்தய வீரர் என்ற சிறப்புக்குரியவர், ஜமேக்காவின் உசேன் போல்ட். 27 வயதான உசேன் போல்ட் ஒலிம்பிக்கில் இதுவரை 6 தங்கமும், உலக தடகளத்தில் 8 தங்கம் உட்பட 10 பதக்கங்களை பெற்றுள்ளார். 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டத்தில் உலக சாதனையும் படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &