BREAKING NEWS

Sep 6, 2013

#VOPL2013 கிரிக்கெட் சமர் நாளை கொழும்பில்

வீர­கே­சரி இணை­யத்­தளம் ஏற்­பாடு செய்­துள்ள இலங்­கையின் தமிழ் வலைப்­ப­தி­வா­ளர்­க­ளுக்­கான  #VOPL-2013 மென்­பந்து கிரிக்கெட் சுற்­றுப்­போட்டி நாளை சனிக்கிழமை நடை­பெ­ற­வுள்­ளது.
கொழும்பு–2 மலே கிரிக்கெட் மைதா­னத்தில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடை­பெ­ற­வுள்ள இச்­சுற்­றுப்­போட்­டியில் FacebookFighters, TwitterTuskers, YoutubeYoungsters ஆகிய மூன்று அணிகள் கள­மி­றங்­கு­கின்­றன.
எமது AliffAlerts இணையத்தளமானது TwitterTuskers அணியை பிரதிநிதித்துவப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.



நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளி­லி­ருந்தும் இணை­யத்­தி­னூ­டாக வலைப்­ப­தி­வு­களை மேற்­கொள்ளும் பதி­வாளர்கள் இவ்­வ­ணி­களில் இடம்­பி­டித்­துள்­ளனர். அணிக்கு பதி­னொ­ருவர் அடங்­கிய 7 ஓவர்­க­ளுக்கு மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட இச்­சுற்­றுப்­போட்டி இறு­தி­வரை விறு­வி­றுப்பை ஏற்­ப­டுத்தும் என்­பது மறுக்­க­மு­டி­யா­தது.

இலங்­கையின் சமூ­க­வலை ஊட­க­வி­யலை ஊக்­கு­விக்கும் பொருட்டு நாட­ளா­விய ரீதியில் தமிழ் மொழி மூலம் இணையத்­தள பதி­வு­களை மேற்­கொள்ளும் பதிவாளர்களை ஒன்று திரட்டும் முகமாக இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &