BREAKING NEWS

Jun 21, 2013

ICCCT 2013: இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி.

இலங்கையை வென்ற இந்தியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது!
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களால் இலங்கை அணியை வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி, இலங்கையை முதலில் துடுப்பெடுத்தாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. 

இலங்கை அணி சார்பாக அதிகூடிய ஓட்டங்களாக மஹேல ஜயவர்தன 38 ஓட்டங்களையும் மத்தியூஸ் 51 ஓட்டங்களையும் பெற்றனர். 

182 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் களம் இறங்கிய இந்திய அணி 35 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 182 ஓட்டங்களை பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. 

இந்திய அணி சார்பாக கோலி 58 ஓட்டங்களையும் தவான் 68 ஓட்டங்களையும் பெற்று இந்திய அணியின் வெற்றிக்கு வழிகோலினர். 

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &