ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நெஜாத் பயணித்த ஹொலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஹெலிகொப்டரில் ஜனாதிபதியுடன், ஏனைய அரச அதிகாரிகளும் பயணித்துள்ளதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
மலைப்பாங்கான பகுதியொன்றில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என ஜனாதிபதியின் இணையத்தளம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டரின் அவசர தரையிறக்கத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், ஹெலிகொப்டர், பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
அஹமதி நெஜாத்தின் இரண்டாவதும் இறுதியுமான பதவிக் காலம் நிறைவடையவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.