பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் சுவையூட்டிகள் கலந்த உணவு வகைகள் மற்றும் பானங்கள் விற்பனை செய்யப்படுவதை முற்றாகத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு சுவையூட்டிகள் கலக்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதால் மாணவர்கள் பாரியளவில் சுகவீனமுற்று வருவதாகவும் இது தொடர்பில் பெற்றோரிடமிருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் மேற்படி அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.