காணாமல் போயுள்ள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட, தனது மனைவியுடன் பிரான்ஸில் வசித்து வருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுருத்திக பெர்னாண்டோ சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
லங்கா ஈ நியூஸ் செய்திச்சேவையின் ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட, கடந்த 2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 04ஆம் திகதி முதல் காணாமல் போனமை குறிப்பிடத்தக்கது.