கொலன்ன பகுதியில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் படுகாயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார்.
இன்று (08) அதிகாலை வீசிய கடும் காற்றுடன் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது. மரத்திற்குள் நசுங்குண்டு காயமடைந்த நபர் எம்பிலிபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் உயிரிழந்துள்ளார்.
களுத்துறையில், சீரற்ற காலநிலை காரணமாக 12 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 292 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் தெரிவிக்கின்றது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.