நேற்று மாலை வெள்ளை வேனில் வந்த நபர்கள் தனது கணவரை கடத்திச் சென்றதாக மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
ரஜித லக்மால் எனப்படும் 34 வயது குடும்பஸ்தரே கடத்தப்பட்டுள்ளார்.
நேற்று மாலை குறித்த நபரின் வீட்டிற்குச் சென்றவர்கள் வர்த்தகர் குறித்து விசாரித்தபோது அவர் வீட்டில் இல்லை என அவரது மனைவி கூறியுள்ளார்.
அதன்பின் மாலை 6.30 அளவில் வீட்டுக்கு வந்த நபர்கள் கணவரை கடத்திச் சென்றதாக மனைவி தெரிவித்துள்ளார்.
யார் இந்த கடத்தலை புரிந்தவர்கள் என்ற தகவல் இன்னும் வெளியாகாத நிலையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.