கேகாலை, இரத்தினபுரி, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை குக்குலேகங்க நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கள, பாலிந்தநுவர மற்றும் அகலவத்த பிரதேச செயலகப் பிரிவுகளிலுள்ள தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் சீரற்ற காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.