சாண்டா மோனிகா நகரில் கல்லூரி ஒன்றின் அருகே துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இது குறித்த தகவல் தெரியவந்த நிலையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
அப்போது கல்லூரி வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கும் போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் மர்ம நபர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவத்தின் பின்னர் போலீசார் அப்பகுதிய்ல் நடத்திய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டதில் 6 பேரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இத் தாக்குதலில் படுகாமயடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் அடிக்கடி தலைதூக்கும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பீதியை உருவாக்கியுள்ளது.