BREAKING NEWS

May 22, 2013

மார்பில் பாலைக் குடித்த TV நிகழ்ச்சித் தொகுப்பாள ரால் பரபரப்பு!


நெதர்லாந்தின் டச்சு தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஒருவர் சனிக்கிழமை இரவு நடாத்திய ரி.வி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தாய் ஒருவரின் மார்பில் இருந்து பாலை உறிஞ்சியதைப் பார்த்து பார்வையாளர்கள் திகைப்படைந்தனர்.
தாய்ப்பால் ஊட்டுவதில் உள்ள அர்ப்பணிப்பு குறித்து நிகழ்ச்சித் தொகுப்பாளரான Paul De Leeuw இன் செயலைப் பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் பங்கேற்ற பெண்களில் சிலர் மேலதிக பாலை வேறு குழந்தைகளுக்காக தானமாக கொடுத்து வந்தனர்.
அந்த நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளரை அழைத்த பெண் ஒருவர் பால் புட்டியில் இருக்கும் பாலை குடித்துப் பாருங்கள் என்றார்.
அதற்கு நிகழ்ச்சித் தொகுப்பாளர் நகைச்சுவையாக… எங்கே பால் வருகின்றதோ அங்கே குடிக்க விரும்புகின்றேன் என்றார்.
அதற்கு தாய்ப்பாலை தானமாக வழங்கும் பெண்ணும் நிபந்தனையுடன் ஒப்புக் கொண்டார். கடிக்காமல் முயற்சி செய்யுங்கள் என்றார். குறித்த பெண்ணின் மார்பில் பாலை குடித்து விட்ட நிகழ்ச்சித் தொகுப்பாளர் தான் இரண்டாவது தடவையாக மிகச் சிறந்த பாலைக் குடித்தேன் என்றார்.
ஆனால் இந்த விடயம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானதைத் தொடர்ந்து நெதர்லாந்தில் பெரும் சர்ச்சையினை தோற்று வித்து விட்டது.
சமூக வலைத் தளங்களிலும் குறித்த நிகழ்ச்சித் தொகுப்பாளரை கடுமையாகத் தாக்கி விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
breastfeeding-1_1732170a
breastfeeding-2_1732171a
breastfeeding-3_1732172a

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &