மூன்று தசாப்த யுத்தத்தின் போது ஏற்பட்ட அழிவுகள் தொடர்பில் கணக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் டி.சி.குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பு தொடர்பான அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் சமர்ப்பிக்க எண்ணியுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் யுத்த சூழலில் ஏற்பட்ட மரணங்கள், இடம்பெயர்வுகள், காணாமற்போதல் மற்றும் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதன்போது முக்கிய கவனம் செலுத்தப்படவுள்ளது.
நடவடிக்கை குழுவொன்றின் ஊடாக வினா கோப்பை தயாரித்து அடுத்த மாதம் கணக்கெடுப்பை ஆரம்பிக்கவுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் டி.சி.குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்போது நாட்டிலுள்ள அனைத்து வீ்டுகளுக்கு தோறும் சென்று தகவல்களை திரட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாக அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் கிராம உத்தியோகத்தர்களை கணக்கெடுப்பு அதிகாரிகளாக பயன்படுத்தி இந்த கணக்கெடுப்பை வெற்றிகரமாக முன்னெடுக்க உத்தேசித்துள்ளதாகவும் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
May 20, 2013
யுத்தத்தால் ஏற்பட்ட அழிவுகளை கணக்கெடுக்க நடவடிக்கை!
Posted by AliffAlerts on 12:31 in NL | Comments : 0