BREAKING NEWS

May 20, 2013

4 சிறு நீரகங்களுடன் வாழும் லன்டன் பெண்மணி (20)!

லண்டனை சேர்ந்த ஜெஸ்சிகா கர்பே (20). இவருக்கு வயிற்றின் வலது பகுதியில் கடுமையான வலி ஏற்பட்டது. எனவே அவர் டாக்டரை சந்தித்தார். அப்போது சிறுநீர் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், சிறுநீர் தொற்று நோய் இருப்பது தெரிய வந்தது. அதற்குரிய மருந்து மாத்திரை வழங்கப்பட்டது. இருந்தும் நோய் குணமாகவில்லை.

எனவே, அவரது சிறுநீரகம் ஸ்கேன் செய்யப்பட்டது. அப்போது, வலது புற சிறுநீரகத்துடன் 7 செ.மீட்டர் கட்டி இருப்பதை டாக்டர்கள் பார்த்தனர். இதை தொடர்ந்து 11 நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. அதில், அவருக்கு வலப்புறத்தில் 2 சிறுநீரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னர் ஆபரேசன் செய்து அவற்றுடன் வளர்ந்த கட்டி அகற்றபட்டது. இதற்கிடையே, ஆபரேசனின் போது இடது புறத்தில் மேலும் 2 சிறுநீரகங்கள் இருப்பது தெரியவந்தது. இதன் மூலம் ஜெஸ்சிகாவின் உடலில் 4 சிறுநீரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று 4 சிறுநீரகங்களுடன் ஒரு மனிதன் உயிர் வாழ்வது மிகப்பெரிய வரப்பிரசாதம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &