மறைந்த ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்த்தனவின் பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்கு ஐக்கிய தேசிய கட்சியின் அஜித் மன்னப்பெரும நியமிக்கப்படவுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்டிருந்த ஜயலத் ஜயவர்த்தன 58302 விருப்பு வாக்குகளை பெற்று நான்காவது இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தார். அஜித் மன்னப்பெரும ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்திருந்தார்.
எனினம் கம்பஹா மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் ஐந்து பேர் தெரிவு மட்டுமே பாராளுமன்றத்துக்கு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் நான்காவது இடத்தில் ஜயலத் ஜயவர்த்தன எம்.பி.யும் ஐந்தாவது இடத்தில் ஜோன் அமரதுங்க எம்.பி. யும் தெரிவாகினர்.
அந்தவகையில் 44812 வாக்குகளை பெற்ற அஜித் மன்னப்பெரும ஐக்கிய தேசிய கட்சியின் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்திருந்தார். இந்நிலையில் தற்போது ஜயலத் ஜயவர்த்தனவின் மறைவின் பின்னர் அவர் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளார்.