வடதுருவத்தில் அமையப் பெற்றிருக்கும் கனடாவின் வட பகுதியில் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் அப்பகுதியில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு உருவான பனிமலைகள் வெப்பமயமாதலின் விளைவாக உருகியது தெரிய வந்தது.
பனி மலைகள் உருகிய காரணத்தால், அப்பட்டமாக தெரிந்த தரைப்பகுதியில் பாசி போன்ற தாவரங்கள் வளர்ந்திருப்பதை விஞ்ஞானிகள் கண்டனர். ஆராய்ச்சியில் அவை 400 ஆண்டுகளுக்கு முந்தைய தாவரங்கள் என்பதும், பனியால் உறைந்து போய் விட்டதும் கண்டறியப்பட்டது.
அவை முற்றிலும் அழிந்து போயிருக்கும் என எண்ணிய விஞ்ஞானிகள் ஆச்சர்யத்தில் உறைந்து போய் விட்டனர். காரணம் பனி விலகியதால் தற்போது புத்துயிர் பெற்றிருக்கின்றன அத்தாவரங்கள்.
இதனைக் குறித்து ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.