நாட்டின் தென் அரைப்பகுதியில் இடியுடன் கூடிய மழை அல்லது விட்டுவிட்டுப் பெய்யும் மழை பெய்யுமென வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் விட்டுவிட்டுப் பெய்யும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை அவ்வப்போது பெய்யும். இதேவேளை, இது புத்தளம், குருநாகல், மாத்தளை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்கும் பரவக்கூடுமென அந்நிலையம் கூறியுள்ளது.
மணிக்கு 20 கிலோமீற்றர் வரையான வேகத்தில் தென்மேற்கு நோக்கிய திசையில் காற்று வீசும். சில வேளைகளில் இதன் கதி மணிக்கு 60 கிலோமீற்றர் வரையும் அதிகரிக்கலாம். புத்தளத்திலிருந்து யாழ்ப்பாணமூடாக திருகோணமலை வரையும் காலியிலிருந்து அம்பாந்தோட்டையூடாக பொத்துவில் வரையும் காற்று வீசும்.