இம்புல்கொட – யாகொட பகுதியில் இயங்கி வந்த மனித பாவனைக்கு பயன்படுத்தமுடியாத சட்டவிரோத தேயிலை தயாரிப்பு நிலையம் ஒன்றை முற்றுகையிட்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், அங்கிருந்து 20,000 கிலோகிராம் தேயிலை தூளை மீட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பு செய்யப்பட்ட போது பல்வேறு பெயர்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவென தூள் வகைகள் தயார்படுத்தப்பட்டுக் கொண்டிருந்ததாகவும் குறித்த சுற்றி வளைப்பை இலங்கை தேயிலை சபை அதிகாரிகள் சிலருடன் இணைந்து பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புலனாய்வு பிரிவு மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.