முல்லைத்தீவு மாவட்டத்தில் 50 ஏக்கர் நிலப்பிரப்பில் முஸ்லிம் மக்களை குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட செயலாளர் என். வேதநாயகம் தெரிவித்தார்.
அமைச்சர் றிசாத் பதுயுதீன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட கலந்துரையாடலில் இது தொடர்பில் உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த குடியேற்றத்திற்காக ஒட்டுசுட்டான் வீதி, குமுழமுனை, குழா முறிப்பு, சிலாவத்தை தியோநகர் ஆகிய ஐந்து இடங்கள் பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.
May 12, 2013
50 ஏக்கர் நிலப்பிரப்பில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றம்
Posted by AliffAlerts on 19:41 in NL | Comments : 0