பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்க்ஷ மீது நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் குற்றம் சுமத்தியுள்ளார்.
முஸ்லீம்களுக்கு எதிராக பல்வேறு அடக்குமுறைகளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வரும் பொதுபலசேனா அமைப்பின் ஒன்றுகூடல்களுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்க்ஷ பங்கேற்க்கின்றமை கவலையளிக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனா அமைப்பின் கூட்டங்களில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்க்ஷ பங்கேற்க்பதனூடாக அவ்வமைப்பின் செயல்களை ஊக்குவிக்கும் உந்துசக்தியாக அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லீம்களுக்கு எதிரான விரோதங்களையும், குரோதங்களையும் தடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால், குறித்த அமைப்பின் செயல்கள் தொடர்பில் சர்வதேச்த்தின் அவதானம் திரும்பும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொதுபலசேனா அமைப்பின் அடக்குமுறைகள் தொடர்பில் ஆராய்ந்து முடிவெடுப்பதற்காக அமைச்சரவையை அவசரமாக ஒன்றுகூட்ட வேண்டும் என, ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்த போதும் அதனை அவர் நிராகரித்துவிட்டார் எனவும் நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம் சுட்டிக்காட்டியுள்ளார்.
Apr 1, 2013
BBS கூட்டங்களில் கோட்டபாய பங்கேற்பது கவலை யளிக்கிறது – ஹக்கீம்
Posted by AliffAlerts on 11:47 in NL | Comments : 0
