Apr 1, 2013
திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன் – சமந்தா
Posted by AliffAlerts on 11:51 in EC | Comments : 0
நடிகர் சித்தார்த்துக்கும் சமந்தாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியுள்ளன. இருவரும் ஜாபர்தஸ்த் என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது நெருக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் காளகஸ்தி கோவிலுக்கு சமந்தாவும் சித்தார்த்தும் குடும்பத்தினரோடு சென்றனர். அங்கு அருகருகே உட்கார்ந்து ராகு, கேது பூஜை செய்தனர். சிறப்பு வழிபாடு செய்து கடவுளை வழிபட்டனர்.
அதன்பிறகே இவர்கள் காதல் விவகாரம் அம்பலத்துக்கு வந்தது. இருவரும் திருமணத்துக்கு தயாராவதாக கூறப்படுகிறது. அது குறித்து சித்தார்த் கூறும்போது திருமணத்துக்கு நானா தயாராகிவிட்டேன். குடும்பம், குழந்தை என செட்டில் ஆக ஆசை வந்து விட்டது என்றார்.
சமந்தாவிடம் திருமணம் பற்றி கேட்ட போது திருமணத்துக்கு அவசரப்பட மாட்டேன். விரைவில் நிச்சயம் எனக்கு திருமணம் இருக்காது என்றார். சமந்தாவுக்கு கைவசம் ஆறு படங்கள் உள்ளன. சித்தார்த்தும் நிறைய படங்களில் நடித்து வருகிறார். சமந்தா நடித்துக் கொண்டிருக்கும் படங்களை முடித்ததும் திருமணம் நடக்கும் என்கின்றனர்.

