மனித உரிமைகள் செயல் முறை திட்டத்தை விரைவில் அமுல்படுத்தப்பட வேண்டும் என, சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அமைச்சர் மஹிந்த சமரசிங்க மற்றும் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் அடங்கிய நாடாளுமன்ற சிறப்புக் குழுவினால், 2012 ஆம் ஆண்டு இந்த மனித உரிமைகள் செயல் முறை திட்டம் தயாரிக்கப்பட்டது.
இந்த திட்டம் அமுலாக்கப்படுவதை விரைவு அமுல்படுத்துவதன் மூலம், இலங்கை மீது சர்வதேசம் முன்வைக்கும் குற்றச் சாட்டுக்கள் வலுவற்றதாகிவிடும் என, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மகாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குள் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல், மனித உரிமைகள் மேம்பாடுகள் மற்றும் மனித உரிமை விடயங்களை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் மனித உரிமைகள் செயற்திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதன் மூலம் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை அதன் முன்னேற்றம் குறித்து மீளாய்வு செய்து சர்வதேசத்திற்கு சாட்சிகளுடன் சமர்ப்பிக்க முடியுமாயின், எதிர்வரும் ஜூன் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மாநாட்டில் இலங்கை சாதகமான நிலையை பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி பிரதீபா மகாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.
Apr 1, 2013
மனித உரிமைகள் செயல் திட்டம் விரைவில் அமுல் படுத்தப்பட வேண்டும்
Posted by AliffAlerts on 11:54 in NL | Comments : 0