BREAKING NEWS

May 23, 2013

இலங்கைக்கு சீனா மீண்டும் கடனுதவி!

இலங்கை அரசாங்கத்திற்கு சீனா மீண்டும் கடனுதவிகளை வழங்கத் தீர்மானித்துள்ளது. சீன அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கவுள்ளது.

இந்தக் கடன் தொகையுடன் சீன அபிவிருத்தி வங்கி மொத்தமாக இலங்கைக்கு 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக வழங்கியுள்ளது. முக்கியமான கீழ்கட்டுமான வசதிகளை மேம்படுத்துவதற்கு இந்த கடனுதவி பயன்படுத்தப்படவுள்ளது.

பாதை அபிவிருத்திக்கு 300 மில்லியன் டொலர்களும், நீர் வடிகாலமைப்புத் திட்டங்களுக்கு 200 மில்லியன் டொலர்களும், எஞ்சிய தொகை தேசிய வர்த்தக கல்வி நிறுவனத்தின் அபிவிருத்திக்காகவும் பயன்படுத்தப்படவுள்ளன.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &