இது எம்மில் பொதுவாக பலராலும் உணரப்படும் ஒரு விடயமாகும். உண்மையிலேயே GASTRITIS என்றால் என்ன? ஏன் ஏற்படுகின்றது? இதற்கான தீர்வூ என்ன? என்று பலரும் பேசிக்கொள்வது வழமை.
உண்மையிலேயே இது சமிபாட்டுத் தொகுதியின் பிரதான உறுப்பான இரைப்பையில் இடம்பெறும் சில தொழிற்பாட்டு மாற்றங்களால் ஏற்படும் ஒரு நோய் நிலை என்பது பலரும் அறிந்த விடயம். இங்கே நாம், எமது இரைப்பை சமிபாட்டில் எவ்வாறு உதவூகின்றது என்பதனை சுருக்கமாக ஆராய்வோம்.
இரைப்பையானது, இறைவனின் ஆச்சரியமான படைப்புக்களில் ஒன்று. இது, வாயினால் உள்ளெடுக்கப்பட்ட உணவை களத்திலிருந்து பெற்று சில நிமிடங்களுக்கு சேமித்து வைத்து அவ்வூணவூ சமிபாடடையத் தேவையான அனைத்து விடயங்களையூம் மேற்கொள்கின்றது. அதாவது, இரைப்பையிருந்து பலவகை நொதியங்களும், ஹோர்மோன்களும், பல இரசாயணப் பதார்த்தங்களும் குறித்த அளவூகளில் தேவைக்கேற்ப சுரக்கின்றன. இவற்றில், Oxyntic (parietal) கலமானது HCL (ஐதரோக்ளோரிக் அமிலம்), Intrinsic factor இனையூம் சுரக்கின்றது. அத்துடன், பிரதான கலம் (Chief Cell) Pepsinogen மற்றும் இரைப்பை Gastrin எனும் ஹோர்மோனையூம் சுரக்கின்றது.
ஐதரோக்ளோரிக் அமிலத்தின் அவசியம்: இது ஒரு வன்னமிலமாகும். PH 1 - 2 பெறுமானத்தைக்கொண்டது.(அதாவது இது எமது கையில் படின், எரித்து விடுமளவிற்கு சக்தி வாய்ந்ததாகும்.) ஐதரோக்ளோரிக் அமிலமானது, உணவூடன் உடலை அடையக்கூடிய பக்டீரியாக்களை அழித்துவிடுவதுடன், புரதச் சமிபாட்டிற்குத் தேவையான ஊடகத்தை வழங்குவதுடன், புரதச் சமிபாட்டையூம் ஆரம்பிக்கின்றது. அத்துடன், பித்த உற்பத்தியையூம் தூண்டுகின்றது.
Intrinsic Factorன் அவசியம்: இது விற்றமின் B12 உடனிணைந்து, விற்றமின் B12ஐ அகத்துறிஞ்சுவதற்கு உதவூவதுடன், குருதிச்சோகையிலிருந்து (Megaloblastic Anemia) எமது உடலைப் பாதுகாக்கின்றது. இவ் விற்றமின் B 12 குறைபாடானது, மச்ச உணவூகளை தவிர்ப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒரு நோய் நிலமையாகும். ஏனெனில், விற்றமின் B12 மாமிச உணவூகளிலேயே காணப்படுகின்றது.
Gastrin ஹோர்மோனின் அவசியம்: இதன் தூண்டுதலினாலேயே HCL சுரக்கின்றது. உண்மையிலேயே, இரைப்பைச் சாற்றின் உருவாக்கத்திற்கு நரம்பியல் தூண்டுதலும் ஹோர்மோன் தூண்டுதலும் முக்கியமானதொன்றாகும். உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட சுவையறியப்பட்ட உணவை நாம் பார்க்கின்றபோது, அதன் மணம் / வாசனை உணரப்படுமிடத்து, நரம்பியல் தூண்டுதல் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது, அத்துடன், குறித்த உணவானது இரைப்பையை அடையூம் போது ஹோர்மோனின் தூண்டுதல் ஆரம்பமாகின்றது. இவ்வாறான இரசாயண மற்றும் இலத்திரணியல் தூண்டற்செயற்பாடுகள் சாதாரண மனிதனுக்கு (வழமையாக 3 வேளைகள் சாப்பிடுவதனால்) நாளைக்கு பிரதானமாக அம்மூன்று வேளைகளிலும் சாதாரணமாக ஏற்படுகின்றன. இதனை, எமது உடலின் ““Biological Clock”” செயற்படுத்தி வருகின்றது. இதுவே வழமையாகும். இச்சாதாரண மற்றும் வழமையான தொழிற்பாட்டை நாம் எமது பொடுபோக்குத்தனத்தினால், வேலைப்பழுவினால், வாழ்க்கையின் தொழில் மற்றும் நடைமுறை மாற்றங்களினால், மாற்ற முனையூம்போது நோய்களுக்கு உள்ளாகின்றௌம்.
அதாவது,
1. காலை உணவை வழமையாக 07.30 மணிக்கு சாப்பிடும் ஒருவர் வேலைப்பழு அல்லது வேறு விடயங்களினால், 10.00 மணிக்கு சாப்பிடுகிறார் எனின், அது உடனடியாக எமது உடலின் Biological Clock இனால் அடையாளம் காணப்படமாட்டாது. எனவே உடலானது வழமைபோல், 07.30 மணிக்கே Gastrin தூண்டுதலினால் HCL சுரக்கும் செயற்பாட்டை ஆரம்பித்துவிடுகின்றது. இந்நேரத்தில், இரைப்பையில் உணவூ இல்லாததன் காரணத்தினால் இவ்வன் அமிலம் தனது தொழிற்பாட்டினை இரைப்பை சுவரில் செயற்படுத்துகின்றது. இதனால் Hypersecretion of the Acid நிலமை ஏற்படுகின்றது. இந்நிலமை தொடர்ச்சியாக இடம்பெறுவதினாலேயே இரைப்பைச் சுவர் அலட்சி Gastritis நிலமை எமக்கு ஏற்படுகின்றது
2. இரைப்பையினுள் உள்ள அமிலத்துடன்இ இன்னும் செயற்கை சோடா அமிலங்கள் (வாயூ அடங்கிய அமில குளிர்பானங்கள்) அடங்கிய பானங்களை நாம் அருந்தும்போது இரைப்பைச் சுவர் அலட்சி ஏற்படுகின்றது. (அல்லது மேலும் அதிகரிக்கின்றது.)
3. ஒரு வகை பக்டீரியாத்தொற்று Helicobacter Pylori இது இரைப்பைச் சுவரின் சீத மேலணித் தடையினை (Mucosal Barrier) இடையூறு செய்கின்றது. இதனால் நேரடியாக இரைப்பை அமிலம் சுவரை அரித்து அலட்சியை ஏற்படுத்துகின்றது.
4. வேறு சில நோய்களுக்காக அதாவது, மூட்டுவாதத்துக்கு (Arthritis) சிகிச்சையாக வழங்கப்படும் மருந்துகள், Non Steroidal Anti Inflammatory Drugs (NSAIDS)> இருதய நோய்கள் (Aspirin)> உடல் வலி போன்றவற்றின் வழங்கப்படும் மருந்துகளின் பக்கவிளைவூகளாகவூம் இந்நிலமை ஏற்படலாம். இவை சீத உற்பத்தியை குறைக்கின்றன. எனவே, இலகுவாக இரைப்பைச் சுவர் அரிப்பு நிகழ்ந்து அலட்சி ஏற்படுகின்றது.
5. மதுபாவனை மற்றும் புகைத்தல் என்பன அதிக அமில உற்பத்திக்குரிய காரணிகளாகும்.
இவ்வாறு ஒரு சில விரல் விட்டெண்ணக்கூடிய காரணங்களினாலேயே Gastritis நிலமை ஏற்படுவதாக மேற்கத்தேய மருத்துவம் தெரிவிக்கின்றது. எனினும், Serological Test, C Urea Breath Test, Stool Antigen Test என பல்வேறு விலையூயர்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மேற்குறிப்பிட்ட எவ்வித காரணங்களினாலும் இந்நிலமை ஏற்படவில்லை என நிரூபிக்கப்பட்ட பின்பும் GASTRITIS இற்குரிய குணங்குறிகள் இருப்பதாகக் கூறக்கூடியவர்கள் ஏராளம் இன்று எமது சமூகத்தில் இருந்துகொண்டிருக்கின்றனர்.
GASTRITIS இற்கான குணங்குறிகள்.
1. நெஞ்செரிவூ (Heart Burn),
2. அமிலத்தன்மை (Acidity),
3. குமட்டல் / வாந்தி (Nausea and Vomiting)
4. வாயூவெளியேற்றம் ( Gas Production)
5. திட்டுமிட்டாடுதல் (Fullness of blenching) போன்ற குணங்குறிகள் மூலம் Gastritis நிலமையை எமக்கு இணங்கண்டுகொள்ளத்தக்கதாக இருக்கும்.
இதற்கான தீர்வூ என்ன?
இதற்கு பொதுவாக மேற்கத்தேய மருத்துவத்தில், அமிலத்தை நடுநிலைப்படுத்தும் மருந்துகள் (Antacids) அல்லது பக்டீரியாத் தொற்றாக இருக்கும்பட்சத்தில் Eradication Therapy மூலம் சிகிச்சையளிக்கப்படுகின்றது.
இதற்குரிய வேறு நிரந்தர தீர்வூகள் இருக்கின்றனவா?
ஆம் நிச்சயமாக இருக்கின்றது. யூனானி மருத்துவத்தைப் பொருத்தவரையில் மேற்கத்தேய மருத்துவமுறையில் குறிப்பிடப்பட்ட நோயக்காரணிகளுக்கு மேலதிகமாக, அதிலும் முன்னேறிச்சென்று இவ் Gastritis நிலமைக்குரிய பல்வேறு மேலதிக காரணிகளை குறிப்பிடுகின்றது.
அதாவது, Gastritis நிலமை இன்று அதிகளவில் இருப்பதற்கு பிரதானமான காரணங்களில் முதன்மையானதாக கருதப்படுவது உளவியல் காரணங்களாகும். உதாரணமாக, அதிக வேலைப்பழு, பரீட்சை பற்றிய நெருக்கடி அல்லது அழுத்தம் சகித்துக்கொள்ள முடியாத கவலை அல்லது துக்கநிலமைகள் மற்றும் பயம் போன்றவற்றின் மூலமாக உடற்றொழிலியல் பாதிப்புக்கள் ஏற்பட்டு அதன் விளைவாக (Secondary) Gastritis நிலமை ஏற்படுவது அதிகளவில் இன்று காணக்கிடைக்கின்றது. மேலும் ஒவ்வொரு தனிமனிதனதும் பிரத்தியேகமான உடற்றொழிலியல் காரணிகள் பல்வேறு மாற்றங்களுக்குட்படுவதனாலும் இந்நிலமை ஏற்படுகின்றது. இதன் காரணத்தினாலேயே பல்வேறு விலையூயர்ந்த மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்படினும் ஒழுங்கான தீர்வினை வழங்கமுடியாதிருக்கின்றன.
எனினும், யூனானி மருத்துவமுறையில் ஒவ்வொருவருக்கும் பிரத்தியேகமான, தனித்துவமான சிகிச்சைகள் அவர்களது உடல் மற்றும் உளவியல் காரணிகளை முதன்மையாகக்கொண்டு வழங்கப்படுவதன் காரணத்தினாலும் இயற்கையாக எமது உணவூகளில் காணப்படுகின்ற Antacid இயல்புள்ள உணவூ வகைகள் மற்றும் இரைப்பையின் சீதப்படையை உருவாக்கத்தக்க உணவூகள் மற்றும் இயற்கை மருத்துவ மூலிகைகளாலான மருந்துகள், திரும்பத் திரும்ப இந்நிலமை ஏற்படாதவாறு தடுப்பதற்கான ஆலோசனைகள் மற்றும் உடற்றொழிலியல் சீராக்கி மருந்துகள் என தனித்தனியான, பிரத்தியோகமான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றமையினால் இதற்குரிய நிரந்தர தீர்வினை பெற்றுக்கொள்ளத்தக்கதாக அமைகின்றது.
உதாரணமாக: இயற்கை அமில நடுநிலையாக்கிகளாக (Antacids) கற்றாளை, அதிமதுரம், வெள்ளரி போன்றவற்றையூம் சீத மேலணிப்படை உருவாக்கிகளாக கசகசா, இசப்கோல் போன்றவைகளையூம். சமிபாட்டுச் சீராக்கிகளாக கொத்தமல்லி, பெருஞ்சீரகம் போன்றவைகளையூம், பயன்படுத்தி வீடுகளிலேயே இதற்குரிய இலகுவான சிகிச்சைகளை மேற்கொள்வதன் மூலம் ஏற்படக்கூடிய குணங்குறிகளை தவிர்த்துக்கொள்ளலாம்.
BUMS (Hons), Adv. Dip. in Couns. Psychology,
Dip. in Panchakarma & Therapeutic Massage
Dip. in Panchakarma & Therapeutic Massage
