
ஹொலிவுட்டின் புகழ் பெற்ற இயக்குனர் ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் ஜுராசிக் பார்க் படம், 3D தொழில்நுட்பத்தில் வெளிவர இருக்கிறது.
ஹொலிவுட்டின் மிக பிரபலமான யூனிவர்சல் பிக்சர்ஸ் பட நிறுவன
ம் 100ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நிலையில் அவர்கள் தயாரிப்பில் 20 ஆண்டுகளுக்கு முன்பு ‘ஜூராசிக்பார்க்’ படம் வெளிவந்தது.
63 மில்லியன் டொலர் செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட ‘ஜூராசிக்பார்க்’ படம் 900 மில்லியன் டொலர் வருமானத்தை அள்ளித்தந்தது.
அதோடு, சிறந்த இசை சேர்ப்பு, சிறந்த ஒலி எடிட்டிங், சிறந்த காட்சியமைப்பு ஆகிய பிரிவுகளில் இந்த படம் அகடமி விருது பெற்றது.
இந்த நிலையில் ஜூராசிக்பார்க் படத்தை 3D தொழில்நுட்பத்தில் கொண்டு வந்திருக்கிறார்கள். சாம் நைல், லாரா டாம், ஜாப் ஆகியோர் நடித்திருக்கிறார்கள்.
ஜான் வில்லியம்ஸ் இசையில், ஸ்டீபன் ஸ்பீல் பெர்க் இயக்கியிருக்கிறார். ஏப்ரல் முதல் வாரத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. குழந்தைகளை கவர்வதற்காக 3D படத்தில் பல சுவாரசிய காட்சிகள் இடம்பெற்றிருக்கிறதாம்.