BREAKING NEWS

Apr 15, 2013

அமிதாப் கையால் விருது வாங்கியது மகிழ்ச்சி - நயன்தாரா

ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக ஆந்திர அரசின் நந்தி விருது நடிகை நயன்தாராவுக்கு கிடைத்துள்ளது.
இந்தி நடிகர் அமிதாப்பச்சன் விழாவில் பங்கேற்று நயன்தாராவுக்கு விருதை வழங்கினார்.
இது குறித்து நயன்தாரா கூறுகையில், ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் நடித்ததற்காக நந்தி விருது கிடைத்துள்ளது. இது நான் வாங்கும் முதல் நந்தி விருது என்பதால் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன்.
அமிதாப்பச்சன் கையால் இந்த விருதை பெற்றது பெருமையாக இருக்கிறது. அவர் என்னை மிகவும் கவர்ந்தவர். எனது மரியாதைக்கு உரியவர்.
அமிதாப்பச்சனிடம் இருந்து நான் விருது வாங்கியதை எனது தாய் கேள்விப்பட்டு ரொம்ப சந்தோஷப்பட்டார் என்றும் விருதையும், சான்றிதழையும் வாங்கி விட்டு வந்த போது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற மாணவனின் மன நிலையில் இருந்தேன் எனவும் கூறினார்.
நயன்தாரா தற்போது அஜீத்துடன் வலை, ஆர்யாவுடன் ராஜாராணி, உதயநிதி ஜோடியாக இது கதிர்வேலன் காதலி போன்ற பங்களில் நடிக்கிறார்.
தனுஷ் தயாரிக்கும் எதிர் நீச்சல் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். நாகர்ஜுனாவுடன் நடித்த கிரீக் வீருடு படம் வருகிற 26ஆம் திகதி தமிழ், தெலுங்கில் வெளியாகவுள்ளது.






Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &