அடர்த்தியில்லாத கூந்தல்: கூந்தல் அடர்த்தியில்லாமல் இருந்தால், அப்போது கூந்தலை சுருட்டையாக்கி புதிய ஹேர் ஸ்டைல் செய்வதற்கு பதிலாக, நெல்லிக்காய் எண்ணெயை பயன்படுத்தினால், கூந்தல் அடர்த்தியாகும். இல்லையெனில் நெல்லிக்காய் பொடியை, சீகைக்காய் பொடி மற்றும் ஹென்னாவுடன் சேர்த்து கலந்து, தலைக்கு போட்டு குளித்து வந்தால், கூந்தல் அடர்த்தியாகும்.
பொலிவிழந்த முடி: போதிய கூந்தல் பராமரிப்பு இல்லாததாலும், அதிக மாசுபாடு காரணமாகவும், கூந்தலானது பொலிவிழந்துவிடுகிறது. எனவே இதனை சரிசெய்யவும், கூந்தலை வலுவாக்கவும், நெல்லிக்காயை பயன்படுத்தினால், நல்ல பலன் கிடைக்கும்.
முடியின் நிறம் மாறுவது: ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் கூந்தல் வறட்சி, நறம் மாறுதல் போன்றவை ஏற்படுகிறது. எனவே அவ்வாறு முடியின் நிறம் இளமையிலேயே மாறாமல் இருக்க, நெல்லிக்காய் எண்ணெயை தினமும் தடவி கூந்தலை பராமரிப்பது அவசியமாகும்.
BUMS (Hons), Adv. Dip. in Couns. Psychology,
Dip. in Panchakarma & Therapeutic Massage
Dip. in Panchakarma & Therapeutic Massage


