Apr 2, 2013
பெப்பிலியான FASHION BUG மோதல் விவகாரம் முடிவுக்கு வந்தது
Posted by AliffAlerts on 12:44 in NL | Comments : 0
பெப்பிலியான நகரில் ஆடை வர்த்தக நிலையம் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினரும் சுமுகமாக பேசி பிரச்சினையை தீர்த்துக் கொள்ள இணங்கியுள்ளனர்.
குறித்த வழக்கு இன்று (02) கங்கொடவில நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்தபோது இவ் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 17 பேரையும் கங்கொடவில நீதவான் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.