இந்த முழு நாள் உணவுத் தவிர்ப்பு போராட்டம் இன்று நடத்தப்படவுள்ளது.
முன்னதாக இரண்டுவார காலப்பகுதியினுள் ஒருநாள் உணவுத் தவிர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தமிழக திரைத்துறை செய்திகள் வெளியாகியிருந்தன.
அந்த வகையில் இன்று மேற்கொள்ளப்படவுள்ள இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில், தமிழக இயக்குனர் சங்கம், திரைப்பட ஊழியர் சம்மேளனம், தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சங்கம் என்பன இணைந்து கொள்ளவுள்ளன.
ரஜனிகாந்த், கமலஹாசன் உள்ளிட்ட தமிழ்த் திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பலர் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் இணைந்து கொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இதேவேளை கடந்த மார்ச் மாதம் தமிழ்த் திரைத்துறையினர் இதுபோன்ற உணவுத் தவிர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.