BREAKING NEWS

Apr 1, 2013

எல்பிடிய பகுதியில் இனிமேல் முஸ்லிம் களுக்கு கடை கிடையாது.??

காலி, எல்பிடிய பகுதியில் இயங்கி வந்த முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகளை நிர்ப்பந்தத்தைப் பிரயோகித்து வெளியேற்ற பொது பல சேனா முயற்சி செய்திருப்பதாக கொழும்பு டெலிகிராப் ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

எல்பிடிய பகுதியில் சிங்களவர்களுக்கு சொந்தமான 13 கட்டிடங்களில் முஸ்லிம் வர்த்தகர்களால் நடாத்தப்பட்டு வரும் கடைகள் வருடா வருடம் புதுப்பிக்கப்பட்டும் குத்தகை ஒப்பந்தத்திலும் செயல்பட்டு வந்தன.

இக்கடைகளை இனி வரும் காலங்களில் முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டாம் என சிங்கள உரிமையாளர்களை பொது பல சேனா கேட்டுக்கொண்டுள்ளதாகவும், கிட்டத்தட்ட இந்த முயற்சியில் அவர்கள் வெற்றியடைந்திருக்கும் நிலையே காணப்படுவதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

கடந்த 29ம் திகதி பொது பல சேனா எல்பிட்டிய கூட்டத்தின் போது இங்குள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் பொது பல சேனா அமைப்பால் காலை 11 மணிக்கு மூடும்படி பணிக்கப்பட்டதுடன் கடை உரிமையாளர்கள் வெள்ளை உடையுடன் பொதுக் கூட்டத்துக்கு சமூகமளிக்கவும் கேட்டுக் கொள்ளப்பட்டதாக அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

“எல்பிடிய விடுதலை” என இதை பொது பல சேனா வர்ணித்திருப்பது குறிப்பிடத்தக்கது

http://www.colombotelegraph.com/index.php/elpitiya-liberated-by-bbs-no-more-muslim-shops/

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &