2011 ஆம் ஆண்டு தங்காலையில் தமது விடுமுறையை கழிப்பதற்காக சென்றிருந்த 24 வயதுடைய ரஷ்ஷிய பட்டதாரிப் பெண்ணான விக்டோரியா கச்சேவா கடுமையாக தாக்கப்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் விடுதி அறையொன்றிற்கு தூக்கிச் சென்று ஆடைகள் அனைத்தையும் களைந்து அந்தக் குழுவில் இருந்த அனைவரும் இணைந்து பாலியல் வல்லுறவில் ஈடுபட்டதாகவும். தனது ஆண் நண்பரான பிரித்தானியப் பிரஜை செஞ்சிலுவை சங்க பணியாளருமான 32 வயதுடையகுரம் சேய்க் அடித்து முகத்தில் வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விக்டோரியா கச்சேவா சுயநினைவிழந்த நிலையில் பாலியல் உறவிற்கு உட்படுத்தப்பட்டமை மரபணு பரிசோதனையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தங்காலை பிரதேச ஆளும் கட்சி அரசியல் தலைவரும், ஜனாதிபதியின் நெருங்கிய உறவினருமான ஒருவரே பிரதானமானவராக தம்மீதான நாசகார செயலுக்கான மூல காரண மனிதர் என விக்டோரியா கச்சேவா குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உறவினர் என்ற காரணத்தினால் நியாயம் கிடைக்காது என்பது உண்மையாக இருக்கின்றபோதும், கொலை செய்யப்பட்ட ஆண் நண்பரான குரம் சேய்க் உயிருடன் இருந்திருந்தால் என்ன செய்திருப்பாரோ அதை இறுதிவரை செய்து போராடி நீதியை பெற்றுக்கொள்வது உறுதி என விக்டோரியா கச்சேவா தெரிவித்துள்ளார்.
குறித்த கொடூரச் சம்பவம் தொடர்பில் 8 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டபோதும், பின்னர் ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரான ஆளும் கட்சி தங்காலை தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதாணபதிரன பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.