BREAKING NEWS

Apr 17, 2013

கர்ப்பிணிகள் சாப்பிட வேண்டிய முக்கிய பழங்கள்!!!

கர்ப்பிணிகள் சாதாரணமாக எதையும் சாப்பிடும் ஒரு முறைக்கு இரண்டு முறை யோசித்து பின் தான் சாப்பிடுவார்கள். ஏனெனில் சில உணவுகள் கருவில் இருக்கும் குழந்தைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதாலேயே. அதிலும் முதல் முறை கர்ப்பமானவர்களாக இருந்தால், எப்போதுமே அதிக கவனத்துடன் இருப்பார்கள். மேலும் இந்த நேரத்தில் பெரியர்வர்கள் என்ன சொன்னாலும், அதையே கேட்டு நடப்போம். குறிப்பாக கர்ப்பிணிகள் மேற்கொள்ளும் டயட்டில் நிச்சயம் அதிகப்படியான ஆரோக்கியமான மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவுகளை தினமும் உட்கொள்ள வேண்டும். அதிலும் காய்கறிகளில் கீரைகள், கேரட், ப்ராக்கோலி, குடைமிளகாய், பீன்ஸ், பருப்புகளும் மற்றும் தயிர், ஓட்ஸ், நட்ஸ், முட்டை போன்றவற்றையும் உட்கொள்ள வேண்டியது அவசியம். என்ன பழங்கள் சாப்பிட வேண்டும்? என்று கேட்கலாம். ஏனெனில் பழங்களில் பப்பாளி மற்றும் அன்னாசி கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதால், இதனை தவிர்க்க வேண்டும். எனவே இப்போது பழங்களில் எந்த பழங்களை கர்ப்பிணிகள் சாப்பிடலாம் என்று ஒருசில பழங்களை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, அந்த பழங்களை சாப்பாட்டில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

AVOCADO:
FOLIC ACID அதிகம் நிறைந்திருக்கும் பழங்களில் AVOCADOவும் ஒன்று. கர்ப்பிணிகள் இந்த பழத்தை சாப்பிட வேண்டியது மிகவும் அவசியம்.

மாம்பழம்:
இது சுவையான பழம் மட்டுமின்றி, ஆரோக்கியமான பழமும் கூட. இந்த பழத்தை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், செரிமானம் நன்கு நடைபெறுவதோடு, இதில் அவர்களுக்கு தேவையான VITAMIN A & C அதிகம் உள்ளது.

திராட்சை: 
நிறைய பெண்கள் திராட்சை கருவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறார்கள். ஆனால், திராட்சையில் உள்ள VITAMIN A, சமிபாட்டின் அளவை சீராக வைக்கும். மேலும் திராட்சையில் FOLATE, POTASSIUM PHOSPHORUS, MAGNESIUM & SODIUM  அதிகம் உள்ளதால், கர்ப்பிணிகள் சாப்பிடுவது நல்லது.

எலுமிச்சை:
எலுமிச்சையை JUICE  போட்டு கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அதில் உள்ள ANTI OXIDANT கருவிற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி, இது கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் குமட்டல் (NAUSEA), காலை அசௌகரியம் (MORNING SICKNESS), செரிமான பிரச்சனை போன்றவற்றை சரிசெய்யும்.

வாழைப்பழம்:
கர்ப்பமாக இருக்கும் போது மலச்சிக்கல் ஏற்படும். எனவே இத்தகைய பிரச்சனையை போக்குவதற்கு கர்ப்பிணிகள் வாழைப்பழத்தை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை குணமாகும்.

ORANGE:
 CITRUS பழங்களில் ஒன்றான ORANGE  பழம், கர்ப்பிணிகளுக்கு சாப்பிட மிகவும் பிடிக்கும். அதிலும் ORANGE பழத்திலும் VITAMINS  மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதனை தினமும் கர்ப்பிணிகள் சாப்பிட்டால், வயிற்றில் வளரும் குழந்தை அழகாக பிறக்கும்.


ஆப்பிள்:VITAMINS அதிகம் உள்ள ஆப்பிளை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், அவர்களது உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, சிசுவிற்கும் நல்லது.

பேரக்காய்:
பேரக்காயில் குறைந்த அளவில் GLYCEMIC INDEX இருப்பதால், கர்ப்பிணிகள் இந்த பழத்தையும் சாப்பிடலாம்.








BUMS (Hons), Adv. Dip. in Couns. Psychology,
Dip. in Panchakarma & Therapeutic Massage

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &