
மேலும் அவ்வறிக்கையில், இதுவரை பொது பல சேனாவின் ஒரு பிரிவாக செயற்பட்டு வந்த சிங்ஹல ராவய மற்றும் ராவனா பலய ஆகிய இயக்கங்களுடன சகல தொடர்புகளையும், பொது பல சேனாவின் பெயருக்கு பங்கம் ஏற்படும் விதத்தில் செயற்பட்டமை, ஒழுக்கத்துடன் செயற்படாமை ஆகிய காரனங்களால் 2013/04/10 ஆந் தேதி முதல் துன்டித்தித்துள்ளது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
மேலும் குறித்த உயர்பீட கூட்டமானது கடந்த ஏப்ரல் 7ஆந் திகதி பொதுபல சேனாவின் செயளாலர் ஞானாசார தேரர் தலைமையிலான குழு அமரிக்கா சென்ற பின்னர் 9 ஆம் திகதி கூட்டப்பட்டே இந்த அவசர முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அத்தோடு குறித்த அறிக்கைகளையும் திலந்த விதானகேயே விடுத்துள்ளார்…