திருத்தப்பட்ட புதிய மின் கட்டண அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என, மக்கள் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்சாரக் கட்டண திருத்தம் குறித்து பொதுமக்களிடம் இருந்து 200 க்கும் அதிகமான எழுத்துமூல யோசனைகள் மற்றும் 79 வாய்மூல யோசனைகள் கிடைக்கப்பெற்றதாக ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, புதிய மின் கட்டண அதிகரிப்பிற்கான சூத்திரம் நியாயமானதாக இல்லாவிடின் மின்சார சபைக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நுகர்வோர் இயக்கம் அறிவித்துள்ளது.
ரூபாவின் பெறுமதி குறைந்துகொண்டே செல்லும் பிரச்சனை, பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்களை மீள செலுத்தவேண்டிய இக்கட்டான நிலை என பல்வேறு பிரச்சனைகளை முகம் கொடுத்துவரும் இலங்கை அரசு அந்த சுமையை மக்கள் மீது சுமத்துவது முற்றிலும் பிழையானது என தேசிய நுகர்வோர் இயக்கம் தெரிவித்துள்ளது.