2012 ஆம் ஆண்டு ஒரு சமய பிரிவுக்கு எதிராக பொதுபலசேனா குரல் கொடுத்ததாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை தாம் மறுப்பதாக, பொதுபலசேனா பேச்சாளர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்.
ஹலால் சான்றிதழை பௌத்தர்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மட்டுமே பொதுபலசேனா குரல் கொடுத்தது. ஹலாலை ரத்துச் செய்ய வேண்டும் என ஒருபோதும் தெரிவிக்கவில்லை. ஹலால் முஸ்லீம்களின் உரிமை. குறித்த ஒரு மதத்திற்கு எதிராக பொதுபலசேனா செயற்படாது என அவர் தெரிவித்துள்ளார்.
தம்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்யான குற்றச்சாட்டு தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்திற்கு எழுத்துமூல விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், பொதுபலசேனா குறித்த ஒரு மதத்திற்கு எதிராக பிரசாரம் செய்யவில்லை. சட்டவிரோதமாக வழங்கப்பட்டு வரும் ஹலால் சான்றிதழ் தொடர்பில் இரண்டு ஊடகவியலாளர்கள் மாநாடுகளை நடத்தியது மட்டுமே உண்மை எனவும், பொதுபலசேனா ஒரு இராணுவம் அல்ல என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.