
இலங்கை பல மதங்கள் அமைதியாக வாழும் நாடு இருப்பினும் சமையங்கள் மீது தாக்குதல் இடம்பெறும்போது பாதிக்கப் பட்டவர்கள் போலிசில் முறையிடுவதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக இந்த அவசர அழைப்பு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப் படுகிறது. மதத்தின் பெயரால் அச்சுறுத்தல்கள் அல்லது துன்புறுத்தல்களை எதிர்கொண்டால் குறித்த இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது .