இலங்கை அருகே வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதாக தமிழக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ மழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. வங்க கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு நிலைகள் உருவானாலும் அவற்றால் தமிழகத்தில் பெரிய அளவில் மழை பெய்யவில்லை.
கடந்த 3 நாட்களுக்கு முன்பு அந்தமான் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென் கடலோர தமிழகத்தில் லேசான மழைதான் பெய்தது.
இந்த நிலையில் இலங்கை அருகே வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களில் இன்று முதல் மழை பெய்யும் என்றும், சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை வரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
தரைக்காற்றும் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்றும் 29ம் திகதி ஓரளவு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை பெய்யும். தரைக்காற்றும் பலமாக வீசும்.
இதேவேளை, இந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ஆங்காங்கே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
Dec 27, 2012
இலங்கை அருகே வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை
Posted by AliffAlerts on 11:01 in செய்தி உள்ளூர் | Comments : 0