BREAKING NEWS

Dec 18, 2012

விரிவுரையாளர் சம்பள பிரச்சினைக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு

இவ்வருட இறுதிக்குள் தமது சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படும் என நிதி அமைச்சின் செயலாளர் தங்களிடம் உறுதி அளித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று (17) நிதி அமைச்சின் செயலாளருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் கலாநிதி டெரன்ஸ் மதுஜித் தெரிவித்தார்.

சம்பள உயர்வு குறித்த சுற்றறிக்கை இவ்வருட இறுதிக்குள் வெளியிடப்படும் என இதன்போது நிதி அமைச்சின் செயலாளர் வாக்குறுதி அளித்ததாக அவர் குறிப்பிட்டார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &