BREAKING NEWS

Dec 26, 2012

இன்று தேசிய பாதுகாப்பு தினம்

ஆழிப்பேரலை ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் பூர்த்தியாகின்றன. இந்நிலையில், இன்று தேசிய பாதுகாப்பு தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று விஷேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பிரதான நிகழ்வு பதுளை மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது. இதில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்ளவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, ஆழிப்பேரலைக்குப் பலியானோரை நினைவுகூர்ந்து இன்று காலை 9.25 முதல் 9.27 வரையான இரண்டு நிமிடங்களில் மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு, நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்த மௌன அஞ்சலிக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அனைத்து அரசதுறை, தனியார்துறை நிறுவனங்களையும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி, இந்தோனேஷியாவின் சுமாத்ரா தீவுக்கருகில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து தாக்கிய 'சுனாமி' ஆழிப்பேரலை காரணமாக இலங்கை, இந்தோனேஷியா, இந்தியா, தாய்லாந்து, மலேஷியா, மாலைதீவு ஆகிய நாடுகளில் சுமார் 280,000 பேர் பலியாகினர்.

இதனால், இலங்கையில் மாத்திரம் 40ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &