வலஸ்முல்ல தெற்கு கனுமுல்தெனியவில் 'மர்மப்பொருள்' விழுந்துள்ளதாக தேசிய வானியல் ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது.
கனுமுல்தெனிய கஹடேல்லகெட எனுமிடத்தில் பலாமரத்தின் மீதே இந்த 'மர்மப்பொருள்' விழுந்துள்ளதாகவும் அந்த மர்மப்பொருள் விழுந்ததையடுத்து குறித்த மரம் தீப்பற்றி எரிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வானத்திலிருந்து பாரிய வெளிச்சத்துடன் பூமியை நோக்கி நேற்றிரவு 9 மணியளவில் மிகவேகமாக வந்த அந்த மர்மப்பொருள் பலாமரத்தில் சுமார் 25 அடி உயரத்தில் விழுந்து சாம்பலாகியுள்ளது. அந்த மரமும் 25 அடி உயரத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
இதனையடுத்து பிரதேசவாசிகள் பாதுகாப்பான இடங்களை நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். திம்புலாகல மற்றும் கம்பஹா பிரதேசங்களிலும் இவ்வாறான மர்மப்பொருட்கள் வியாழக்கிழமை விழுந்தமை குறிப்பிடத்தக்கதாகும்