BREAKING NEWS

Nov 26, 2012

இறுதியில் மலாலாவுக்கு அடைக்கலம்

தலிபான் தீவிரவாதிகளின் தாக்குதலுக்குள்ளாகி இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் சிறுமி மலலாவுக்கு பாகிஸ்தான் அரசால் அந்நாட்டிலேயே நிரந்தரமாக தங்க வீடு ஒதுக்கப்பட இருக்கிறது.

தலிபான்களுக்கு எதிராக பேசியதால் கடந்த அக்டோபர் 9-ந் தேதி துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவர் மலலா என்ற 15 வயது சிறுமி. இதைத் தொடர்ந்து அவருக்கு இங்கிலாந்தில் சிகிச்சை கொடுக்கப்பட்டு ஓரளவு குணமடைந்து உள்ளார் இவர்.

இவர் குணமடைந்தவுடன் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப் படுவாரா அல்லது அங்கேயே தங்குவரா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது இங்கிலாந்து.

ஆம் மலாலாவுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது இங்கிலாந்து.

கடந்த மாதம் மலலாவின் பெற்றோரும் அவரது சகோதரர்களும் இங்கிலாந்துக்கு சென்றனர். இந்த விவகாரம் ஐக்கிய நாடுகள் சபை வரை போய் மலலா சுடப்பட்ட 30வது நாளை மலலா நாளாக கடைபிடிப்பதாகவும் அறிவித்தது.

இந்நிலையில் பாகிஸ்தான் அரசு, மலலாவின் தந்தைக்கு இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் வேலைவாய்ப்பை வழங்கியுள்ளது.

தற்போது ஓராண்டுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியம்ன்ம் வழங்கப்பட்டிருப்பதால் பிர்மிங்ஹாமில் வீடும், வாகன வசதியும் வழங்கப்படுகிறது. மலலாவின் உடலில் இருக்கும் குண்டு அகற்றப்பட்ட பிறகு இந்த வீட்டில்தான் அவர் வசிக்க இருக்கிறார்.

பாகிஸ்தான் அரசின் இந்த நடவடிக்கையை இங்கிலாந்து எம்.பி. காலித் மஹ்மூத் வரவேற்றுள்ளார்.

Share this:

 
Designed By Fazisolutions
Designed By Fazi Solutions &